Monday, October 13, 2014

கவிதையாக மாறிக் கொண்டிருக்கிறது மனது


நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது குறைந்தபாடில்லை.
வயதைப் போல சுமைகளும்..
ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது.

கவலை மறக்க கண்ணீர் துடைக்க..
அவ்வபோது இந்த மாதிரியான கவிதைகளும்
சில நட்பு வட்டங்களும்..
வாழ்க்கையை அழகாக்க...

மனம் காற்றாய் மாறி
சுதந்திரத்தை அனுபவிக்கிறது

இந்தக் கவிதையை படிக்கையில்...


"பேசும் பார் என் கிளி" -என்றான்
கூண்டைக் காட்டி.
வாலில்லை.
வீசிப் பறக்கச் சிறகில்லை.
வானம் கைப் பட வழியில்லை.

"பேசும்! இப்போது பேசும் என
மீண்டும் மீண்டும் அவன் சொல்ல...

"பறவையென்றால்
"பறப்பதெனும்
பாடம் முதலில் படியென்றேன்.


                    -கல்யாண்ஜி.

Wednesday, December 11, 2013

“சினிமாவும் நானும்” -நூல் வெளியீடு

சென்ற சனிக்கிழமை மகேந்திரன் ஐயாவின் “சினிமாவும் நானும்” என்ற நூல் வெளியீடும் அவரின் இணையதள திறப்புவிழாவும் ஒருங்கே அமையபெற்ற நிகழ்ச்சிக்கு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.எனது வழக்கம் அப்படியாகதான் இதுவரையும் இருக்கிறது.கோவையின் மண்ணை தொட்டவுடனே ஒரு பரவசம் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது.ஏனென்றால் எனக்கு வாழ்வு கொடுத்த நகரம் அது. என்னை மனிதனாக்கிய மனிதர்கள் நிறைந்த நகரம் அது.


காலை பதினொரு மணியிலிருந்தே நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை தோழர்களுடன் செய்து கொண்டுமிருந்தேன்.மதியம் தோழர் பாமரன்,தோழர் தங்கவேலுடன் சென்று கொஞ்சம் வேலைகளையும் முடித்துக் கொண்டு அப்படியே ரெசிடென்சி ஹோட்டலுக்கு சென்றோம்.தெய்வீக குரலில் தெவிட்டாத இன்பத்தை அளித்த பாடகி ஜென்சி அம்மாவுக்காக தோழர்கள் பாமரன்,தங்கவேல்,தமிழ்மதி,ஓவியா,மயில்வண்ணன்,கனவு” சீனிவாசன்,அவர்களுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.இதற்குள் பேட்டி எடுப்பதற்கு மயில்வண்ணன் கேள்விகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.


அவர் வருவதாக சொன்ன கால அளவு கரைந்துக் கொண்டே இருக்கிறது.காத்திருக்கிறோம்..காத்திருக்கிறோம் ஒவ்வொரு காராக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இந்த வண்டியாக இருக்கலாம் அந்த வண்டியாக இருக்கலாம் என.பின்பு தொலைப்பேசியில் அழைத்து வழி சொல்லி கொண்டிருந்தோம்.கடைசியாக காந்தக் குரலால் எங்களை கட்டிப்போட்ட அந்த குயில் வந்து சேர்ந்தது அவ்வளவுதான் எங்களின் கண்களும் மனதும் குதுகாலமிட ஆரம்பித்துவிட்டது.


Tuesday, November 26, 2013

இரவு நீண்ட நேரமாகிவிட்டது.இப்பொழுதெல்லாம் காதல் படங்களைதான் பார்க்கபிடிக்கிறது,காதல் பாடல்களைதான் கேட்க பிடிக்கிறது மனம் காதலால் நிரம்பி வழியும் போது அப்படிதான் நினைக்க தோன்றும் போலிருக்கிறது.டேபிளின் மேலிருக்கும் லேப்டாப்பில் ”நீதானே என் பொன்வசந்தம்” ஓடிக்கொண்டிருக்கிறது.அதில் சமந்தாவின் கியூட்டான பெர்ப்பாமன்ஸை பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல சமந்தாவின் பின்னணி குரல் பிண்ணி எடுக்கிறது ஒரு கரகரப்பு கலந்த காமம் தெளிக்கும் குரல் அசத்தல்.மொத்தத்தில் அன்றைய இரவு நான் காலியாகிப் போனேன்.

Friday, May 31, 2013

ஒருவழி பாதை


உனக்கும் எனக்கும்

இடையே இருப்பது

ஒருவழி பாதையென

இலக்கியமாய் சொல்கிறாய்




இருந்தும் நாம்  சந்தித்து

கொள்வதில்லை.

Labels: , ,

சொந்த கதை சோக கதை............




வாழ்க்கை முழுக்க பரிதவிப்பையும் பரிதாபத்தையும் சுமந்து திரிவது என்றால் என்னமாதிரியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என தனக்குள் எண்ணிக் கொண்டிருக்கிறேன்.இப்போது கூட பாருங்கள் பீத்தோவனின் சிம்பொனியை கேட்டுக் கொண்டுதான் இதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்கு வாய்த்த வாழ்க்கை அவ்வளவுதான் போல.

Tuesday, May 14, 2013

தங்கமீன்கள்: விருப்பமான திரையிசை



முன் குறிப்பு:

தங்கமீன்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன்.அதற்குள் சில காரணமிருக்கிறது. தன் முதல் படத்திலே திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த என் ஆதர்ச இயக்குநர் ராம் முதல் காரணம். இரண்டாவது எளிமையான வார்தைகளில் வாழ்க்கையின் எதார்த்தங்களைக் கலந்து கட்டி இதயங்களை வருடிக் கொடுக்கும் பாடல்களை தொடர்ந்து கொடுத்துவரும் நா.முத்துகுமார் .


இரண்டாவது குறிப்பு:

“கற்றது தமிழ்” படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும் என் நேசிப்பிற்குரியவையாக,விருப்பமான வரிகளாக இருந்துவருவதால் இந்தப் படத்தின் பாடல்களும் என் விருப்பத்திற்குரிய பாடல்களாக அமைய போகிறது என என் மனத்திற்கு பட்டது. அதுவும் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாதலால் என் எதிர்ப்பார்ப்பு இன்னும் இன்னும் என எகிறிக் கொண்டே போனது. காத்திருத்தலே கலை என அதுவும் ஒருநாள் காற்றினில் தவழ்ந்து எல்லோர் இதயங்களிலும் ஆனந்த யாழை மீட்டுகையில் அப்பப்பா அப்படியொரு ஆனந்தம்தான்.



 அன்புடன்
அறிவழகன்

Labels: , , ,

Monday, May 13, 2013

நீண்ட நாட்களுக்குப் பிறகு….


வணக்கம் நண்பர்களே உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மிகு வேலையின் காரணமாக பதிவெழுத முடியாமல் போனது.இப்போது கொஞ்சம் நேரமும் மனமும் இருப்பதால் மீண்டும் தொடர்ந்து எழுத ஆசைப்படுகிறேன்.மற்றபடி அடுத்த பதிவில் சந்திப்போம். 

அன்புடன்
அறிவழகன்.