“சினிமாவும் நானும்” -நூல் வெளியீடு

சென்ற சனிக்கிழமை மகேந்திரன் ஐயாவின் “சினிமாவும் நானும்” என்ற நூல் வெளியீடும் அவரின் இணையதள திறப்புவிழாவும் ஒருங்கே அமையபெற்ற நிகழ்ச்சிக்கு எந்தவித திட்டமிடலும் இல்லாமல் பயணம் செய்ய ஆரம்பித்தேன்.எனது வழக்கம் அப்படியாகதான் இதுவரையும் இருக்கிறது.கோவையின் மண்ணை தொட்டவுடனே ஒரு பரவசம் பற்றிக் கொள்ள ஆரம்பித்தது.ஏனென்றால் எனக்கு வாழ்வு கொடுத்த நகரம் அது. என்னை மனிதனாக்கிய மனிதர்கள் நிறைந்த நகரம் அது.


காலை பதினொரு மணியிலிருந்தே நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டும் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை தோழர்களுடன் செய்து கொண்டுமிருந்தேன்.மதியம் தோழர் பாமரன்,தோழர் தங்கவேலுடன் சென்று கொஞ்சம் வேலைகளையும் முடித்துக் கொண்டு அப்படியே ரெசிடென்சி ஹோட்டலுக்கு சென்றோம்.தெய்வீக குரலில் தெவிட்டாத இன்பத்தை அளித்த பாடகி ஜென்சி அம்மாவுக்காக தோழர்கள் பாமரன்,தங்கவேல்,தமிழ்மதி,ஓவியா,மயில்வண்ணன்,கனவு” சீனிவாசன்,அவர்களுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.இதற்குள் பேட்டி எடுப்பதற்கு மயில்வண்ணன் கேள்விகளை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.


அவர் வருவதாக சொன்ன கால அளவு கரைந்துக் கொண்டே இருக்கிறது.காத்திருக்கிறோம்..காத்திருக்கிறோம் ஒவ்வொரு காராக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இந்த வண்டியாக இருக்கலாம் அந்த வண்டியாக இருக்கலாம் என.பின்பு தொலைப்பேசியில் அழைத்து வழி சொல்லி கொண்டிருந்தோம்.கடைசியாக காந்தக் குரலால் எங்களை கட்டிப்போட்ட அந்த குயில் வந்து சேர்ந்தது அவ்வளவுதான் எங்களின் கண்களும் மனதும் குதுகாலமிட ஆரம்பித்துவிட்டது.


Comments

Popular posts from this blog

கவிதையாக மாறிக் கொண்டிருக்கிறது மனது

சொந்த கதை சோக கதை............