தங்கமீன்கள்: விருப்பமான திரையிசை
முன் குறிப்பு:
தங்கமீன்களைப் பற்றி எழுத வேண்டும்
என நினைத்தேன்.அதற்குள் சில காரணமிருக்கிறது. தன் முதல் படத்திலே திரை உலகையே திரும்பிப்
பார்க்க வைத்த என் ஆதர்ச இயக்குநர் ராம் முதல் காரணம். இரண்டாவது எளிமையான வார்தைகளில்
வாழ்க்கையின் எதார்த்தங்களைக் கலந்து கட்டி இதயங்களை வருடிக் கொடுக்கும் பாடல்களை தொடர்ந்து
கொடுத்துவரும் நா.முத்துகுமார் .
இரண்டாவது குறிப்பு:
“கற்றது தமிழ்” படத்தின் அனைத்து பாடல்களும் இன்றளவும்
என் நேசிப்பிற்குரியவையாக,விருப்பமான வரிகளாக இருந்துவருவதால் இந்தப் படத்தின் பாடல்களும்
என் விருப்பத்திற்குரிய பாடல்களாக அமைய போகிறது என என் மனத்திற்கு பட்டது. அதுவும்
அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாசப்பிணைப்பை சொல்லும் படமாதலால் என் எதிர்ப்பார்ப்பு
இன்னும் இன்னும் என எகிறிக் கொண்டே போனது. காத்திருத்தலே கலை என அதுவும் ஒருநாள் காற்றினில்
தவழ்ந்து எல்லோர் இதயங்களிலும் ஆனந்த யாழை மீட்டுகையில் அப்பப்பா அப்படியொரு ஆனந்தம்தான்.
அன்புடன்
அறிவழகன்
Comments
நான் ஓஜஸ். இசைப்பாவின் பங்கிளிப்பாளர் மற்றும் ஒருங்கினைப்பாளர். பாடல்களை எங்களிடம் கேட்டுவிட்டு, நீங்கள் இங்கு பதிவு செய்து இருக்கலாமே....