என் பால்யம் முதல் ஆந்திராவில் பிழைத்துக்கொண்டிருக்கிற இந்த அக்டோபர் வரையும் விடுமுறை என்றாலே அம்மாவை அழைத்துக்கொண்டு நீலகிரி கூடலூர் வயநாடு என்று கிளம்பத்தான் தோன்றுகிறது எந்தமுகமூடியுமற்ற நிர்வாணங்களை வனங்களின்வழியேதான் மீட்டுக்கொள்ளமுடியும் வாழ்வை நுகர்வாகபார்க்காத சனங்களின் சொந்தபூமியது . நமக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிற சூழ்ச்சிகள் ஏதுமற்ற பழங்குடிகளின் புண்ணியபூமியது மூன்று கிலோமீட்டர் அடர்ந்த மரங்களும் சோலைகளும் நிறைந்த பள்ளத்தாக்கில் மிக குறுகிய ஒற்றையடி பாதையில்தான் சென்றிருக்கிறேன் . ஆவிபறக்கும் யனைகளின் சூடான சாணங்களும் மான்களின் துள்ளலும் நின்று யாரென்று கேள்விகேக்கும் காட்டெருமைகளின் பார்வைகளும் பறவைகளின் கீரிச்சுகளும் இன்னும் அப்படியே மனசுக்குள் தேங்கியிருந்து தழும்பிக்கொண்டிருக்கிறது அங்கே தாத்தாவுக்கென்று சொந்தமாக கொஞ்சம் நிலமிருந்தது . அதிலேதான் மஞ்சளும் , காப்பி கொட்டை மரமும் அன்னாசியும் பயிரிட்டிருந்தார் .. அங்கே கிடைக்கும் ...
Posts
Showing posts from October, 2012